Sale
ஆவி காத்த அதிசயப் புதையல் ( Aavi Kaatha Adisiya Puthaiyal)
பழங்கால எகிப்தில் ஆட்சி செய்த மன்னர்களின் விவரங்களிலேயே மிகவும் ஆர்வத்துடன் படிக்கப்படுவது, டூடங்காமன் என்ற மன்னரின் வரலாறுதான்.
10 வயதில் அரியணை ஏறி, 19 வயதில் எதிர்பாராத விதமாக மரணத்தைத் தழுவிய இளம் மன்னர் டூடங்காமன் வாழ்க்கையும், அவரது மரணமும் விசித்திரங்கள் நிறைந்தவை.
டூடங்காமன் கல்லறை 1922ஆம் ஆண்டு கண்டுபிடித்து திறந்து பார்க்கப்பட்ட போது, அந்த மன்னர் தொடர்பான மர்மமான தகவல்களும், உலகிலேயே இதுவரை கிடைத்திராத அளவிலான மிகப் பெரிய தங்கப் புதையலும் வெளிவந்தன.
உண்மையான அந்த வரலாறு இங்கே விரிகிறது. அது, வியப்பால் உங்கள் விழிகளை விரியச் செய்வது நிச்சயம்.