இன்றைய மாணவரே நாளைய பாரதம் (Indraiya maanavarae Naalaiya Bharatam)
(0 – 19 வயது வரை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் உளவியல் தீர்வுகளும்)
மாணவர்களே நாட்டின் எதிர்காலம்.
மாணவச் சமூகம் ஆக்கப்பூர்வமானதாக மாற வேண்டும். அந்த மாற்றம் தடையின்றி நிகழ குடும்பங்கள், பள்ளிகள், சக மாணவர், அரசு மற்றும் சமூகம் உரிய பங்களித்தல் அவசியம்.
வாழ்க்கைப் பயணத்தில் மாணவப் பருவம் மிகக்குறுகிய காலம் என்பதை உணர்ந்து, சமூக நலன் பேணும் குடிமைப் பண்புகள் கொண்ட, உன்னத மதிப்பீடுகளோடு இருக்கும் மாணவர்களால் மட்டுமே நாட்டின் வரலாற்றை மேம்படுத்த இயலும்.
நாட்டின் வருங்கால வரலாற்றை பொற்காலமாக்க வேண்டும் என்ற கருத்தில், தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டு, தன் தாயின் கருவறைக்கும் கல்வி தந்த வகுப்பறைக்கும் பெருமை சேர்க்கும் மாணவனே நாட்டின் மிகச் சிறந்த மனித வளம். அவ்வாறெனில் அம் மாணவனின் மனவளம் பேணப்படுவதே மனிதவளம் காப்பதின் முதல்நிலை.
மாணவனின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் அவனுள் எழும் குழுப்பங்கள், சந்திக்க வேண்டிய சவால்கள் அவற்றை அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டு வெற்றியாளனாக உதவுவதற்கான கருத்துக் கோர்வையே இந்த படைப்பு.