Sale
தந்தையை விஞ்சிய ராஜேந்திர சோழனின் வெற்றி வரலாறு! (Rajendra Cholan)
பழங்கால இந்திய மன்னர்களின் வரலாறு என்று, பாட நூல்கள் உள்ளிட்ட பல புத்தகங்களில் நாம் வாசித்துக் கொண்டு இருப்பது முழுமையானதா?
பெருமை மிக்க அந்த வரலாறு, அரைகுறையாக ஆவணப்படுத்தப்பட்டு அரிதாரம் பூசப்பட்ட அழுக்குப் பக்கங்களில், அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறது என்பதுதான் உண்மை.
தன்னிச்சையாக எழுதப்பட்ட ஒருதலைப்பட்சமான கருத்துகள், ஆக்டோபஸ் போல வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமித்து ஆழமாக வேரூன்றிவிட்டன. வியத்தகு சாதனைச் சம்பவங்கள் பல, மூடி மறைக்கப்பட்டுவிட்டன.
இதன் உபயம், ஆங்கிலேயர்கள் மற்றும் வடநாட்டுக் கல்வியாளர்கள் என்றால், அதற்கு ஒத்துஊதியவர்களில் நம்மவர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு என்பது கசப்பான உண்மை.
அனைவரும் வாசிக்கக்கூடிய பெரும்பாலான வரலாற்றுப் பக்கங்கள், இந்திய வரலாற்றுத் தகவல்களுக்கு, மவுரியர்களின் ஆட்சியையே பிள்ளையார் சுழியாகப் பயன்படுத்தி இருப்பது ஏன்?
மவுரியர்களின் காலத்தில்தான் இந்த நாடே முளைத்து எழுந்ததா?
மவுரியர்களுக்கும் முன்னதாக பன்னெடுங்காலமாக இங்கே ஆட்சி செய்த மன்னர்கள் எல்லோரும் இல்லாமல் போனார்களா?
மவுரியர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, உலகுக்கு மொழியையும் நாகரிகத்தையும் கற்றுக் கொடுத்த தமிழ் மண்ணில், வீரச் செறிவுடன் ஆட்சி செய்த பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய வம்சங்களில் உதித்த மன்னர்களின் சாதனைகள், நிஜத்தில் நடைபெறாத கற்பனைக் கதைகளாக புனைந்து எழுதப்பட்டவையா?