சித்திரையின் முத்திரை (Sithiraiyin Muthirai)
உலகம் போற்றுகின்ற சித்திரைத் திருவிழாவின் சிறப்புகளை தன்னுடைய நூல்களிலே மிகச் சிறப்பாக முனைவர்.சண்முகதிருக்குமரன் வழங்கியிருக்கிறார். இந்த அற்புதமான நூல் தல வரலாறு போல இல்லாமல் அவரது அனுபவங்களை வாசகர்களின் கரம் பிடித்து நடப்பது போல அமைத்து இருக்கின்றார். சித்திரையில் 12 நாட்களும் நடைபெறுகின்ற திருவிழா முறைகள், புராண வரலாற்று சம்பவங்கள், திருவிழாக்களின் தத்துவங்கள், திருவிழா மூலமாக இறைவன் நமக்கு உணர்த்துகின்ற உன்னத நெறிகளை எல்லாம் எளிமையான தமிழில் அனைவரும் புரிந்து கொள்கிற விதத்தில் நூலாசிரியர் வடித்து தந்திருக்கிறார்.
திருமதி.தி.வைஜெயந்திமாலா