Sale
மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும் ( Mamallapuram Vaaralatru Pudhirgalum Vidaigalum)
பல்லவ மன்னர்கள், உலகிலேயே கடினமான பாறைகளை, இரவு பகலாக பல ஆண்டுகளாகச் செதுக்கியும் குடைந்தும் அற்புதமான சிற்பக் கருவூலங்களைப் படைத்ததற்கு, அவர்கள் நோக்கம் என்னவாக இருந்தது என்பது வரலாற்றில் பதிவாகாமல் மறைந்துவிட்டது.
ஏதோ ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வளவு அரிய சாதனைகளை அந்த மன்னர்கள் செய்து இருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி.
அவர்களின் அப்படிப்பட்ட நோக்கம் என்ன?
இதுமட்டும் அல்ல. அவர்கள் உருவாக்கிய அத்தனைச் சிற்பங் களும், குடைவரைக் கோவில்களும் ஏதோ ஒருவகையில் புதிர்களாகக் காட்சி அளிக்கின்றன.
மாமல்லபுரம் சிற்ப அழகைப் பார்க்கும் அதேநேரம், அவற்றை உற்றுக் கவனித்தால், அவற்றில் புதிர்கள் மறைந்து கிடப்பதைக் காணலாம். இது தொடர்பாக ஆய்வாளர்களும், அறிஞர்களும் பலவிதமான கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகம் தயாராகி இருக்கிறது.