Kurundthogaip Poongavilirundhu (குறுந்தொகைப் பூங்காவிலிருந்து)
குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றைத் தழுவி, கண்ணதாசன், வைரமுத்து, வாலி போன்ற கவிஞர்கள் திரைப்படப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.அதுபோல் குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றைத் தழுவிச் சமகாலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சில சிறுகதைகள் எழுதவேண்டும் என்று எனக்கு ஆவல் எழுந்தது.
அந்த ஆவலால் உந்தப்பட்டுக் குறுந்தொகைப் பூங்காவிலிருந்து சில மலர்களைக் கொய்து நான் தொடுத்த மாலைகளும் பூங்கொத்துகளும் அடங்கியது தான் இந்த நூல். இந்த நூலில் உள்ள சிறுகதைகளில், கதாபாத்திரங்கள்தங்களுக்குள் பேசிக்கொள்ளும்பொழுது, பேச்சுத் தமிழிலும் மற்ற இடங்களில் செந்தமிழிலும் எழுத முயற்சி செய்திருக்கிறேன்.
ஒவ்வொரு சிறுகதைக்கும் தொடர்புள்ள குறுந்தொகைப் பாடல்களையும் அவற்றிற்கு விளக்கவுரைகளையும் பின்னிணைப்புகளில் கொடுத்திருக்கிறேன்.