Sale
தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த பரிசு, நனி சிறந்த தமிழ் நாளேடாம் தினத்தந்தியின் ஆசிரியர் திருமிகு. அமுதன் அவர்களால் படைக்கப்பெற்ற “ஆயிரம் ஆண்டு அதிசயம் (Aayiram aandu adisiyam)“ என்னும் இந்நூல் தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த பரிசு.
தமிழ்நாட்டு வரலாற்றையும், பண்பாட்டுக் கூறுகளையும் தம்முள் பொதித்து வைத்திருப்பவை திருக்கோவில்களே.
அத்தகு கோவில்கள் பற்றிய அருந்தகவல்களை மெத்தப் படித்த அறிஞர்கள் மட்டுமன்றி ஓர் எளிய பாமரனும் அறியும் வகையில் எடுத்துச் சென்று உரைப்பது ஒரு சாதுர்யமான கலையாகும்.
அதனை இந்நூலாசிரியர் வியத்தகும் வகையில் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
உலக மரபுச் சின்னமாக விளங்கும் இராஜராஜேச்சரம் என்னும் ஆயிரம் ஆண்டு பழமையுடைய தஞ்சைப் பெரிய கோவிலின் மாண்புகளைச் சுவையான முப்பத்தெட்டுத் தலைப்புக்களில் மணம் கமழும் சொல் மாலையாகத் தொகுத்து தந்துள்ளார்.