Sale
காதல் கதைகளில் காதல் போராட்டங்களை விட காதலியுடன் ஆன போராட்டங்களே இங்கு அதிகம். சொல்லாத காதலை சொல்வதாய் சொதப்பிய சுவாரஸ்ய கதைகள் பல உண்டு. காதலை ஆண்பால் பெண்பால் என பலர்பால் சொல்லிய வரலாறுகளும் இங்கு உண்டு. காதலை புரியவைக்க ஒரு ஆணின் அதிகபட்ச முயற்சி என இதை எழுதுவதா ? அல்ல காதலே புரியாதவளிடம் ஒரு ஆணின் காதலை புரியவைக்கும் போராட்டமாக இதை எழுதுவதா ?
காதலின் பிறப்பிடமாக இருக்கும் அந்த கருமை நிற கண்ணனிடமே விட்டுவிடுவோம் என்று முடிவெடுத்த கணம்.
கண்ணனே எனக்கும் வழிகாட்டி ஆனான். புராணங்கள் பல ராதை கிருஷ்ணனின் காதலை பதிவு செய்தது ஏராளம்.
ராதையின் காதலை உணர்ந்த இந்த உலகம் இக்கால கண்ணன் ராதை மேல் கொண்ட காதலை கொஞ்சம் உணர்ந்தால் தான் என்ன ?
ராதையின் மனதை கரைய வைக்க இக்கால கண்ணன் படும் போராட்டங்கள் கண்ணனுக்கு காதலை உணர வைக்க ராதையின் எதார்த்தமான ஆட்டங்கள் …
காதலில் பிரிதல்,சேர்தல் தாண்டிய புரிதலின் பரிணாமங்களின் சிதறல்களே ….
ஹ்ம்ம் (Hmm…)