Sale
மறுவாசனை ( Maruvaasanai)
எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மாணிக்கின்றன. எண்ணங்கள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும், என்ற சொற்றொடர்கள் யாவும் நேர்மறையான எண்ணங்களை நாம் வளர்த்து,வாழ்க்கையை அறத்தோடு அமைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
தூங்கும் போது நம்முள் பதியும் எண்ணங்களை, அதாவது கனவுகளை கவனித்தீர்களானால் அவை நடைமுறைக்கு சாத்தியமில்லாத்தாகத் தோன்றும், ஆனால் அந்தப் பதிவுகள், நாம் வாழ்க்கையில் வேறு வடிவத்தில் நிச்சயமாக கண்டியிருப்போம்,இல்லை காண்போம்.
வாழ்வில் நடக்கும் அத்துனை நிகழ்விற்கும் இறைவனோ அல்லது இயற்கையோ காரணமாகிறது.
அந்த நிகழ்வுகள் ஒன்றொன்று தொடர்புடையவைகளாகவே இருக்கும். ஒருவருக்கு நடக்கும் நிகழ்வு மற்ற ஒரு சமகால நிகழ்விற்கு காரணமாக இருக்கும். அந்த வகையில் எங்கோ பிறந்து, வளர்ந்த ஒரு கதாபாத்திரம் இறந்தபின் மறு பிறவியெடுத்து வந்து தங்கள் குடும்பத்தின் மிக பெரிய அவமானமான பழிச்செயலை சரி செய்து,அதற்கு காரணமானவர்கள் இறப்பிற்கு காரணமாக திகழ்ந்து தமது கடமைகளை முடிக்கிறான் என்பதுதான் இந்த புதினத்தின் கதைச் சுருக்கம்.