Sale
புன்னகை கிறுக்கல்கள் (Punnagi Kirukalgal)
“பயம் எங்கே முடிகிறதோ!
அங்கே வாழ்க்கை ஆரம்பமாகிறது..” – என்ற ரூசோவின் கூற்றுக்கு இணங்க பயத்தை பயணப் படிகளாக அமைத்து, அவைகளின் வாயிலாக வாழ்க்கையை ஆரம்பிக்கின்றோம் நாம். மெதுவாகப் பேசு அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்! நல்ல எண்ணத்தோடு இரு அது உன் நடத்தையைப் பாதுகாக்கும் – என்று வள்ளலார் கூறுகின்றார். எதை எந்த இடத்தில் பகிரவேண்டும். பகிர்தல் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே இக்கவிதையின் நோக்கம்.
மேலும் நாம் நம் வாழ்க்கையின் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். துன்பத்தை துடைத்தெரியும் வலிமையுடையவர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். மௌனமும் சிரிப்பும் மிகவும் சக்தி வாய்ந்தவை. மௌனமான வாழ்க்கைப் பயணத்தில் புன்னகையோடு பயணிப்போம் இந்த புன்னகைக் கிருக்கல்கள் வாயிலாக