பறவையின் கலை ( Paravayin Kalai )
கடந்த பத்தாண்டுகளாக நான் எழுதியவற்றில் இந்தத் தொகுதிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவையே இந்நூலில் காணப்படுகின்றன. கவிதையை எழுத முனைகையில் அது நமக்கு கவிதையைப்பற்றிச் சொல்லித் தருகிறது என்பதை என்னால் உணரமுடிந்தது நான் இந்தக் கவிதைகளை எழுதிய பொழுதுகளில். இந்த முன்னுரையை எழுதும்போதுகூட பிரமிள், நகுலன், ஐயப்ப பணிக்கர், ரஸ்கின் பாண்ட், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ஆர்தர் ரிம்பாட், ஆக்டேவியா பாஸ், அலெஜாண்ட்ரா பிஸார்னிக் மற்றும் பிற மகத்தான எழுத்தாளர்களால் பிரமிப்புற்ற எனது தூங்காத இரவுப் பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன.