Sale
“ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.”
திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின் மெய்ப்பொருளைக் கண்டதாகாது; மெய்ப்பொருள் காண்ப தென்பது என்போன்றோர்க்கு எட்டாக் கனியே…! எனினும் ‘ஆசைபற்றி அறையலுற்றேன்’, என்பதன்றி வேறில்லை. வள்ளுவத்தின் தேர்ந்த பொருளை உள்ளுந்தொறும் உவக்கும் சான்றோர் பெருமக்கள், குற்றங்கண்டவிடத்துச் ‘சிற்றின்பம் வெஃகி அறனல்ல’ செய்தான் எனக்கொண்டு பொறுத்தருள வேண்டுவன்.
குறள் பொருள் கூறுந்தோறும் மேலொரு இலக்கியப் பொருள் நுகரும் சிறப்பினால் இது சிறப்புரை –யாயிற்று எனக் கொள்க.