Sale
காதலடி நீ எனக்கு …காவலடி நான் உனக்கு …! (Kadhaladi Nee enaku Kavaladi Naan Unaku…!)
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
என்ற குறளுக்கு ஏற்ப நாயகி மேல் உயிரையே வைத்திருக்கும் நாயகன். அவனுடைய காதல் அறியாமலேயே அவனோடு நட்பாக பழகும் நாயகி. நாயகியின் குடும்ப சூழ்நிலையை தாண்டி எவ்வாறு இவர்களது காதல் சேருகிறது. உண்மையான காதல் எங்கிருந்தாலும் சேரும் என்பதற்கு இடையில் வரும் இடையூறுகளும் நாயகனின் எதிரியாக இருப்பவனின் தொல்லைகளையும் கடந்து எவ்வாறு கரம் பிடிக்கிறான். வாழ்க்கையில் அவளது காதலையே வேண்டி நிற்கும் யாசகனாய் நாயகன். நாயகனையே தன் காவல் தலைவனாய் நினைக்கும் நாயகி. இருவருக்குமான காதல் வாழ்க்கையே இக்கதை. குடும்பம் உறவு என்பது எத்தனை முக்கியம் என்பதையும், எப்படிப்பட்ட மாமியார் இருந்தால் பெண்களின் வாழ்க்கை சுகம் தரும் என்பதையும், இக்கதையில் கூறியிருக்கிறேன்.