Sale
கல்லூரி முதல் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் மென்மையான குணத்தையும் ஆர்ப்பாட்டமில்லாத அழகையும் தன்னகத்தே கொண்ட நம் கதையின் நாயகி மீது ஒரு இக்கட்டான சூழலில் அவளது நற்குணங்களைக் கண்டு காதல் வசப்படுகிறான் அதே கல்லூரியில் பெண்களின் கனவு நாயகனாக வலம் மூன்றாம் வருடம் பயிலும் நம் கதையின் நாயகன்.விதியின் வசத்தால் நாயகனின் காதலை ஏற்க மறுக்கும் நாயகிக்கு, குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் வேறுஒருவனுடன் திருமண நிச்சயம் நடக்கிறது.நாயகியின் திருமண செய்தியை அறிந்து கொள்ளும் நாயகன் அதை ஏற்றுக் கொள்ள முடியாது தற்கொலைக்கு முயல்கிறான்..
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே என்ற சூழலில் நாயகிக்கு மன உளைச்சலில் மாறுபட்ட பல கனவுகள் உருவாகி அதன் விளைவால் நாயகனின் மேல் அவளுக்கு இருக்கும் காதலை உணர்ந்து கொள்கிறாள்.
நாயகனுடனான அவளது கானல் கனவானது கலையாது இருக்குமா?? பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தி அவளது கனவு நாயகனாகிய நமது கதையின் நாயகனை கரம்பிடிப்பாளா??
கதையின் ஓட்டத்தில் நாமும் தெரிந்து கொள்வோம், வாசிக்க தயாராகுங்கள் வாசக நெஞ்சங்களே.
கலையாதே கானல் கனவே (Kalaiyadhae Kadhal Kanavae)