Sale
உலகம் போற்றும் கவிஞர்கள் ( Ulagam Potrum Kavingargal)
கவிச் சான்றோர் அகப் பாராளுமன்றத்தின் நிரந்தர உறுப்பினர்கள். அவர்கள் கவிதைகளின் படியே புறப் பாராளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஒரு சமயம் தமிழகச் சட்டப் பேரவையில் “நீர்” பற்றிய விவாதம் வந்தபொழுது, “நீரின்றி அமையாது உலகம்” என வள்ளுவர் கூறியதற்கிணங்க – எனக் கூறப்பட்டது. மதிய உணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட பொழுது “வயிற்றுக்குச் சோறிட வேண்டும்” என்று பாரதி கூறியதற் கிணங்கவே அத்திட்டம் – எனப் பேசப்பட்டது.
இத்தகு உயர் கவிஞர்கள் உலகெங்கிலும் உலவினர்; உலவுகின்றனர். அவர்களுள் சில அயல்மொழிக் கவிஞர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம்.